இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியுடன் காதலா? எலான் மஸ்க் பதில்  

நியூயார்க்கில் நடந்த அட்லாண்டிக் கவுன்சில் குளோபல் சிட்டிசன் விருது வழங்கும் விழாவில், கோடீஸ்வரர் எலான் மஸ்க், இத்தாலிய அதிபர் ஜியோர்ஜியா மெலோனியைப் பாராட்டி விருது வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, சமூக ஊடகப் பயனர்கள் இருவருக்குள்ளும் நட்பை தாண்டிய ஒரு உறவு உள்ளது என கிசுகிசுக்க தொடங்கினர்.
கூடுதலாக மஸ்க், மெலோனிக்கு விருதை வழங்கும்போது, ‘வெளிப்புற அழகை விட உட்புறத்தில் இன்னும் அழகாக இருக்கும் ஒருவருக்கு” எனக்கூறி, ‘இந்த விருதை வழங்குவது ஒரு மரியாதை’ என்று தெரிவித்தார்.
மேலும், “அவர் உண்மையானவர், நேர்மையானவர், உண்மையுள்ளவர் – இது எல்லா அரசியல்வாதிகளையும் எப்போதும் சொல்ல முடியாது” என்று அவர் மேலும் கூறினார்.
மெலோனி தனது X கணக்கில் உரையின் கிளிப்பை பகிர்ந்து,”நன்றி எலான்” என்று எழுதியிருந்தார்.

You May Also Like

More From Author