சீன ஊடகக் குழுமம் உருகுவேவிலுள்ள சீனத் தூதரகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் 4ஆம் தேதி அந்நாட்டின் தலைநகர் மண்ட்விடியாவில் சீனாவின் ஆட்சிமுறை மற்றும் உலகின் வளர்ச்சி பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது.
இதில் உருகுவேவின் துணை அரசுத் தலைவர் கூறுகையில், சீனாவின் வளர்ச்சி உருகுவேவுக்கு மதிப்பு மிக்க அனுபவங்களை வழங்கியது என்று தெரிவித்தார். இரு நாட்டுப் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் மேலும் ஆழமாக்கி, உலகளவில் பல தரப்புவாதத்தை சீனாவுடன் இணைந்து பாதுகாத்து, அனைவரையும் உள்ளடக்கிய நேர்மையான நிலையான உலகத்தை உருவாக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
