ஐபிஎல் 2027 சீசனுக்கான வீரர்கள் தக்கவைப்பு கெடு நெருங்கி வரும் நிலையில், வர்த்தக சாளரத்தில் அணிகளுக்கு இடையேயான வீரர்கள் மாற்றம் சூடுபிடித்துள்ளது. இதன்படி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே 4 முக்கிய வீரர்கள் கைமாறியுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம்இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பணப்பரிமாற்றம் எதுவுமின்றி முழுக்க முழுக்க வீரர்களை மட்டுமே மாற்றிக்கொள்ளும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வர்த்தகத்தின் கீழ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது அதிரடி ஆல்-ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் ஜாக் எட்வர்ட்ஸ் ஆகிய இருவரையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குக் கொடுத்துள்ளது. அதற்குப் பதிலாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடமிருந்து இந்திய இடதுகை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது மற்றும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸ் ஆகிய இருவரையும் ஹைதராபாத் அணி பெற்றுக்கொண்டுள்ளது.
News
@ChennaiIPL and @SunRisers have completed a four-player trade ahead of #TATAIPL 2027.Liam Livingstone (INR 6 Crore, revised fee) and Jack Edwards (INR 3 Crore) move to #CSK, while Khaleel Ahmed (INR 4.8 Crore) and Nathan Ellis (INR 2 Crore) join #SRH.
Details
https://t.co/wC0HDKvRzJ
— IndianPremierLeague (@IPL) November 5, 2026
இந்த டிரேட் ஒப்பந்தத்தில் இங்கிலாந்தின் லியாம் லிவிங்ஸ்டனுக்குத் தான் மிகப்பெரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மெகா ஏலத்தில் ஹைதராபாத் அணி அவரை ₹13 கோடிக்கு வாங்கியிருந்தது. ஆனால், கடந்த சீசனில் அவர் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடி 15 ரன்கள் எடுத்ததால், தற்போது சி.எஸ்.கே அணிக்கு ₹6 கோடிக்கு மட்டுமே டிரேட் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் புதிய சீசனில் லிவிங்ஸ்டனுக்கு ₹7 கோடி ரூபாய் வரை பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
Welcome Liam & Jack!
தொடரும்…
#TrustTheProcess https://t.co/3ILM4aSOuk— Chennai Super Kings (@ChennaiIPL) November 5, 2026
அதேவேளையில், ஜாக் எட்வர்ட்ஸ் ₹3 கோடிக்கும், கலீல் அகமது ₹4.8 கோடிக்கும் தங்களது பழைய ஏலத் தொகையிலேயே டிரேட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சென்னை அணி ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸை அவரது அடிப்படை விலையான ₹2 கோடிக்கு ஹைதராபாத் அணிக்குக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.





