பின்லாந்து அரசுத் தலைவரின் மனைவி சுசானுடன் பொங்லியுவான் தேனீர் விருந்து

சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பின்லாந்து அரசுத் தலைவர் ஸ்டபோடு உடன் வந்த அவரது மனைவி சுசானுக்குச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனைவி பொங்லியுவான் அம்மையார் அக்டோபர் 29ஆம் நாள் மாலை பெய்ஜிங்கில் தேனீர் விருந்து அளித்தார்.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்குடன் இணைந்து பின்லாந்தில் பயணம் மேற்கொண்டது பற்றி பொங்லியுவான் மகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்தார். அவர் கூறுகையில், சீனாவுக்கும் பின்லாந்துக்கும் நீண்டகால வரலாறு மற்றும் பாரம்பரிய பண்பாடு உண்டு.

அடுத்தாண்டு, இரு நாட்டுத் தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவாகும். இரு தரப்பும் கலை, பனி விளையாட்டு முதலிய துறைகளிலுள்ள பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி இரு நாட்டு மக்களுக்கிடையில் நட்புறவை இடைவிடாமல் அதிகரிக்க எதிர்பார்ப்பதாக பொங்லியுவான் தெரிவித்தார். 

You May Also Like

More From Author