ஆகஸ்ட் 30 முதல்: தங்கலான் படத்தின் இந்தி ரிலீஸ் தேதி அறிவிப்பு  

தங்கலான் திரைப்படம் தென்னிந்தியாவில் பெற்ற மகத்தான வெற்றிக்குப் பிறகு, இந்தியில் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் மற்றும் மாளவிகா மோகனன் நடிப்பில் வெளிவந்த இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானதில் இருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படம் வசூல் ரீதியாக நல்ல பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், வட இந்தியாவிலும் படத்தை வெளியிட திட்டமிட்ட படக்குழு, இந்தியில் டப்பிங் செய்து வெளியிடுகிறது.

இந்த திரைப்படம் அதன் கதை, அதிரடி காட்சிகள் இந்தியிலும் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author