சீனத் தேசிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிர்வாகம் அனுப்பிய இரு நிபுணர்கள் அழைப்பை ஏற்று, ஜூலை 15ஆம் நாள் பெய்ஜிங்கிலிருந்து புறப்பட்டு உகாண்டாவுக்குச் சென்றனர். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான ஆப்பிரிக்காவின் மையங்களும், உலகச் சுகாதார அமைப்பும் கூட்டாக நிறுவிய எபோலா நோய் தொடர்பான சம்பவ மேலாண்மைக்கான ஆதரவுக் குழுவில் அவர்கள் சேரவுள்ளனர்.
இந்த இரு நிபுணர்கள், தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான அதிக அனுபவங்களைக் கொண்டுள்ளனர். அவர்கள், வேறு நாடுகளின் நிபுணர்களுடன், தரவுகள் ஆய்வு, இடர்ப்பாடு மதிப்பீடு, தொழில் நுட்ப ஆலோசனைகளின் உருவாக்கம் ஆகியவற்றை மேற்கொள்ளவுள்ளனர்.
ஆப்பிரிக்காவில் தொற்றுநோய் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு சீனா முன்பு போலவே ஆதரவு அளித்து வருகிறது என்று சீனத் தேசிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிர்வாகத்தின் பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
