சீனா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Estimated read time 0 min read

ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு சீனா சென்ற பிரதமர் மோடிக்குத் தியான்ஜின் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

2 நாள் அரசு முறைப்பயணமாகப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த வியாழன் அன்று ஜப்பான் புறப்பட்டுச் சென்றார்.

பின்னர் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற 15வது இந்தியா – ஜப்பான் உச்சி மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று அவர் உரையாற்றினார்.

இதனையடுத்துச் சீனாவில் நாளை நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் மோடி, டோக்கியோவில் இருந்து தனி விமானம் மூலம் சீனாவின் தியான்ஜின் நகருக்குப் புறப்பட்டுச் சென்றார்.

நாளையும், நாளை மறுநாளும் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர்ப் புதினை சந்தித்துப் பிரதமர் மோடி பேசுகிறார்.

இந்நிலையில் சீனாவின் தியான்ஜின் விமான நிலையத்திற்கு வருகைத் தந்த பிரதமர் மோடிக்குச் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

You May Also Like

More From Author