சென்னையில் அடுத்த அதிர்ச்சி: மற்றொரு மருத்துவர் மீது தாக்குதல்!

Estimated read time 0 min read

சென்னை: சென்னையில் மேலும் ஒரு டாக்டர் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. கிண்டி அரசு ஹாஸ்பிடலில் இன்று காலை டாக்டர் பாலாஜி என்பவர் கத்தியால் குத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.

இந்நிலையில், ஸ்டான்லி அரசு ஹாஸ்பிடலில் டாக்டர் ஹரிஹரன், அங்கு சிகிச்சைக்கு வந்த நபர், மருத்துவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓட்டம் பிடித்துள்ளார். இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் வண்ணாரப்பேட்டை போலீஸில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் மருத்துவரைத் தாக்கிய பரத் என்ற நபரை கைது செய்து போலீசார் விசாரணை  நடத்தி வருகின்றனர். இதனிடையே, தமிழக அரசு உடனே மருத்துவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து முக்கிய அரசு மருத்துவமனைகளிலும் சோதனைகளை கட்டாயம் ஆக்க வேண்டும் என மருத்துவர்கள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author