ஐந்தருவி மற்றும் புலி அருவியில் குளிக்க அனுமதி!

    குற்றாலத்தில் ஐந்தருவி மற்றும் புலி அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த பெருமழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதில் சிறுவன் ஒருவன் உயரிழந்த நிலையில் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஒரு வாரம் கழித்து நேற்று அனுமதி வழங்கப்பட்ட நிலையில் கனமழையால் மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று அருவியில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டதால் ஐந்தருவி மற்றும் புலி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் உற்சாகத்துடன் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

You May Also Like

More From Author