இலவச கல்வி திட்டம்; கல்லூரிகளில் சேர ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

Estimated read time 1 min read

சென்னை பல்கலைக்கழகம் 2010-11ம் ஆண்டு முதல் இலவச கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்படி, வரும் கல்வியாண்டில் இலவச கல்வித்திட்டத்தின் கீழ் சென்னை பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற சுயநிதி மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம்.

2025-26ம் கல்வியாண்டில் பிளஸ்-2 வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆதரவற்ற, தாய்-தந்தையற்ற, குடும்பத்தில் பட்டப்படிப்புக்கு வரும் முதல் தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் மாணவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இந்த திட்டம் குறித்த விவரங்கள் மற்றும் பதிவேற்றம் செய்ய வேண்டிய சான்றிதழ்கள் ஆகியவை www.unom.ac.in என்ற சென்னை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தையும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களையும் பல்கலைக்கழக இணையதளத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியான தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

You May Also Like

More From Author