தென் அமெரிக்க கண்டத்தில் சீன அரசுத் தலைவர் அரசு முறை பயணம் தொடக்கம்

பெருநாட்டின் அரசுத் தலைவர்

பொலுவார்டே அம்மையாரின் அழைப்புக்கிணங்க,
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 13ஆம் நாள் முற்பகல், சிறப்பு விமானம்
மூலம் பெய்ஜிங்கிலிருந்து லிமா நகருக்குப் புறப்பட்டார். அந்நாட்டின் லிமா நகரில்
நடைபெறவுள்ள ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 31ஆவது தலைவர்களின்
அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில் அவர் கலந்துகொள்ள உள்ளார். அதே வேளையில்,
அந்நாட்டில் அரசு முறை பயணமும் மேற்கொள்ள உள்ளார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின்
அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர் சைய் ச்சி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்
கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ
முதலியோர் ஷிச்சின்பிங்குடன் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

You May Also Like

More From Author