ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு,இப்பிரதேசத்தின் முக்கிய பொருளாதார ஒத்துழைப்பு மேடையாக விளங்குகிறது. சீனச் சுங்கத்
துறை வெளியிட்ட தரவுகளின்படி,
இவ்வாண்டின் முதல் 10 திங்களில், இவ்வமைப்பின்
பல்வேறு நாடுகளுடன் மேற்கொண்ட ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 21 இலட்சத்து 27
ஆயிரம் கோடி யுவானாகும். இது, வரலாற்றில் முன்கண்டிராத அளவில் உயர்வாகும். அதே
காலக்கட்டத்தில் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகையில் இது 59.1 விழுக்காட்டை
வகிக்கிறது.
இவ்வாண்டின்
முதல் 10 திங்களில், இவ்வமைப்பின் பல்வேறு நாடுகளுக்கு மேற்கொண்ட ஏற்றுமதி மற்றும்
இறக்குமதித் தொகை, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 5.7 விழுக்காட்டு
அதிகரித்துள்ளது. இதே காலத்தில் சீனாவின் ஒட்டுமொத்த பொருளாதார அதிகரிப்பைக்
காட்டிலும் 0.5 புள்ளிகள் உயர்ந்துள்ளது. சீனாவின் முழுமையான தொழில் துறை
அமைப்புமுறை, இவ்வமைப்பின் பல்வேறு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி உற்பத்தி மற்றும்
மக்களின் இனிமையான வாழ்க்கைக்கு மேம்பாட்டிற்கு உதவுகிறது. சீனாவின் உயர் தரமான
வளர்ச்சி, இவ்வமைப்பின் பல்வேறு நாடுகளுக்கு பரந்த சந்தை மற்றும் வளர்ச்சி
வாய்ப்புக்களைக் கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.