தாஜிக்ஸ்தான் தலைமை அமைச்சர் சுரல்சோடாவின் அழைப்பை ஏற்று, அந்நாட்டு தலைநகர் துஷாங்பேவுக்கு 18ஆம் நாள் அதிகாரப்பூர்வமான பயணம் மேற்கொண்டுள்ள சீன தலைமை அமைச்சர் லீ ச்சியாங், ஷாங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைமை அமைச்சர் கமிட்டியின் 25ஆவது கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.
இது குறித்து லீ ச்சியாங் கூறுகையில்,
சீனாவும் தாஜிக்ஸ்தானும், நல்ல அண்டை நாடுகளாகவும் நண்பர்களாகவும் கூட்டாளிகளாகவும் திகழ்கின்றன. கடந்த சில ஆண்டுகளில், இரு நாட்டுறவு வேகமாக வளர்ந்து வருகின்றது. பல்வேறு துறைகளில் இரு நாட்டு ஒத்துழைப்புகள் நிறைய சாதனைகளை பெற்று, இரு நாட்டு மக்களுக்கு நன்மை அளித்துள்ளன. இவ்வாண்டு மே திங்களில் இரு நாட்டு அதிபர்கள், பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தி, இரு நாட்டுறவை ஆழமாக்குவதற்கு திட்டம் வகுத்தனர். தாஜிக்ஸ்தானுடன் இணைந்து, ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இரு நாட்டு வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புகின்றது என்றார்.
