சீன-அமெரிக்கப் பொருளாதார மற்றும் வர்த்தக உறவைச் சீராக வளர்க்க வேண்டும்: ஹே லீஃபங்

இரு நாட்டு அரசுத் தலைவர்கள் எட்டிய ஒத்தக் கருத்துகளையும் பேச்சுவார்த்தை மூலம் பெறப்பட்ட முன்மொழிவுகளையும் சீனாவும் அமெரிக்காவும் சீராக நடைமுறைப்படுத்தி, இரு நாட்டுப் பொருளாதார மற்றும் வர்த்தக உறவை நிதானமாக வளர்க்க வேண்டும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும் அரசவைத் துணைத் தலைமை அமைச்சருமான ஹே லீஃபங் தெரிவித்துள்ளார்.

12ஆம் நாளிரவு பெய்ஜிங்கில் அமெரிக்க-சீன உறவுக்கான தேசிய ஆணையத்தின் துணை நிர்வாகத் தலைவர் லிபெர்க், இவ்வாணையத்தின் தலைவர் ஓலென்ஸ் ஆகியோரைச் சந்தித்த போது அவர் இவ்வாறு கூறினார்.

இரு நாடுகளும் பொருளாதார மற்றும் வர்த்தகத் துறையில் அதிக ஒத்தழைப்பு வாய்ப்புகளை கொண்டுள்ளதைச் சுட்டிக் காட்டிய ஹே லீஃபங், இரு நாடுகளும் ஒரு திசை நோக்கிப் பாடுபட வேண்டும் என்றார். மேலும், அமெரிக்க-சீன உறவுக்கான தேசிய ஆணையம் இரு நாட்டு நட்பு ஒத்துழைப்புக்காக புதிய சாதனை படைக்க வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமெரிக்கத் தரப்பினர் அமெரிக்க-சீன உறவுக்குப் பாலமாக இருக்க விரும்புவதாகத் தெரிவித்தனர்.

 

You May Also Like

More From Author