2024ம் ஆண்டின் உலக இணைய மாநாட்டின் வுஜென் உச்சிமாநாடு நவம்பர் 20ஆம் நாள் செஜியாங் மாநிலத்தின் வுஜென் நகரில் துவங்கியது.
இந்த உச்சி மாநாட்டிற்கு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் புதன்கிழமை காணொளி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
ஷிச்சின்பிங் கூறுகையில்,
தற்போது புதிய சுற்று அறிவியல் தொழில்நுட்பப் புரட்சி மற்றும் தொழிற்துறை மாற்றம் வேகமாக நிகழ்ந்து வருகின்றது. அது, உலகத்தை புரிந்து கொள்வதற்கும் உலகத்தை மாற்றுவதற்கும் மனிதகுலத்தின் திறனைப் பெரிதும் மேம்படுத்தி வருகிறது.
அதே வேளையில் முன்கூட்டியே அறியப்பட முடியாத பல இடர்பாடுகளையும் அறைகூவல்களையும் ஏற்படுத்தும். இணையத்துக்கான பொது எதிர்காலம் கொண்ட சமூகத்தை கூட்டாக உருவாக்கி, இணையம் மூலம் மக்கள் மற்றும் உலகத்தை பயனடைய செய்ய சீனா பல்வேறு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறது என்று தெரிவித்தார்.