விஜய்க்கு எதிராக போலீஸ் புகார் அளித்த டிடிவி.தினகரன்: தமிழக அரசியலில் புதிய பூகம்பம்!  

Estimated read time 1 min read

தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைத் திரட்டுவதில் தவெக (TVK) மற்றும் அதிமுக (AIADMK) அணிகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலின் உச்சகட்டமாக, மன்னார்குடி அமமுக எம்.எல்.ஏ எஸ். காமராஜின் ஆதரவுக் கடிதத்தை விஜய் தலைமையிலான தவெக போலியாகத் தயாரித்ததாகக் கூறி, டிடிவி தினகரன் தரப்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் நேற்று ஆளுநரிடம் சமர்ப்பித்த ஆதரவுப் பட்டியலில் காமராஜின் பெயரும் இடம் பெற்றிருந்தது.
இது “போலியான ஜெராக்ஸ் நகல்” என்றும், தங்கள் கட்சி எம்.எல்.ஏ-வை விஜய் தரப்பு கடத்த முயற்சிப்பதாகவும் டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார்.
இதற்குப் பதிலடியாக, காமராஜ் சுயமாக முன்வந்து ஆதரவுக் கடிதம் எழுதும் வீடியோ காட்சிகளைத் தவெக வெளியிட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author