டோங்கா தீவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு!

டோங்கா தீவில் இன்று அதிகாலை, 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

டோங்கா தீவில் இன்று அதிகாலை 3.42 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. டோங்கா தீவுகள் அருகே பசிபிக் பெருங்கடல் பகுதியில், 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

பசிபிக் பெருங்கடலில், கடலுக்கு அடியில் 220 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.

You May Also Like

More From Author