சீனத் தேசிய பண்பாட்டு பாரம்பரிய நிர்வாகம் அக்டோபர் 28ஆம் நாள் ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் அந்நாட்டின் தேசிய நுண்கலை காட்சியகம் திருப்பிக் கொடுத்த 2 சீனத் தொல் பொருட்களைப் பெற்றுள்ளது.
இழந்த தொல் பொருட்களை அவற்றின் சொந்த நாடுகளுக்கு திருப்பிக் கொடுக்க உதவியளிப்பது என்பது, பல்வேறு நாடுகளின் தொல் பொருள் பாதுகாப்பைப் பராமரித்து, மனிதகுலத்தின் நாகரிக சாதனைகளைப் பேணிக்காக்கும் நேர்மையான செயலாகும் என்றும், சீனாவும் ஆஸ்திரேலியாவும் சர்வதேச ஒப்பந்தங்களைச் செயல்படுத்தி, பண்பாட்டு மரபுச் செல்வங்களைப் பாதுகாப்பதில் பெறப்பட்ட முக்கிய சாதனையாக திகழும் நடப்பு ஒத்துழைப்பு, இருநாடுகளின் பண்பாட்டுப் பரிமாற்றத்தையும் மக்கள் தொடர்பையும் மேம்படுத்தும் என்றும் சீனத் தரப்பு தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா திருப்பிக் கொடுத்த இவ்விரு தொல் பொருட்கள், சீனாவின் வடக்கு சொங் வம்ச பேரரசர்களின் யோங்யூ கல்லறையில் இருந்த இராணுவ அதிகாரி சிலையின் தலை பகுதியும், யோங்சாங் கல்லறையில் இருந்த சிவில் அதிகாரி சிலையின் தலை பகுதியும் ஆகும்.
