சீனப் புத்தாண்டின் போது கொண்டாடப்படும் வசந்தவிழா, யுனெஸ்கோவின் யுனெஸ்கோவின் மனிதகுல மரபுசாரா பண்பாட்டு செல்வத்தின் பிரதிநிதித்துவப் பட்டியலில் டிசம்பர் 4ஆம் தேதி சேர்க்கப்பட்டுள்ளது.
இதனிடையில், ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் சி.எம்.ஜியின் வசந்த விழா கலை நிகழ்ச்சி, வெளிநாட்டில் சீனப் பண்பாட்டுப் பரவலுக்கான முக்கிய சின்னமாக மாறியுள்ளது.
சி.ஜி.டி.என்னின் ஆங்கிலம், ஸ்பானிஷ், ரஷிய மொழி போன்ற சேனல்களும் 81 வகை மொழிகளின் வெளிநாட்டுப் பரவல் மேடைகளும், அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ் முதலிய நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 2600க்கும் மேலான முக்கிய வெளிநாட்டு செய்தி ஊடகங்களுடன் ஒருங்கிணைந்து, பாம்பு ஆண்டுக்கான வசந்த விழா கலை நிகழ்ச்சியை நேரலை வழங்கி ஒளிபரப்பைப் பணியையும் மேற்கொள்ளும்.