உலகப் பொருளாதார அதிகரிப்பில் சீனப் பொருளாதாரப் பங்களிப்பு

 

பூர்வாங்க கணக்கீட்டின் படி, இவ்வாண்டின் முதலாவது காலாண்டில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 28 இலட்சத்து 49 ஆயிரத்து 970 கோடி யுவானாகும்.

இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4.5 விழுக்காடு அதிகமாகும்.
தற்போது, புவியமைவு அரசியல் இடர்பாடு, ஒருதரப்புவாதம், பாதுகாப்புவாதம் ஆகியவை தலைதூக்கி வருகின்றன. உலகப் பொருளாதாரச் செயல்பாட்டில் நிதானமாற்ற அம்சங்கள் தீவிரமாகி வருகின்றன.

இத்தகைய பின்னணியில் எதிர்பார்ப்புகளை விட மேலும் சிறப்பாகச் செயல்பட்ட சீனாவின் பொருளாதாரம், எளிதானது அல்ல. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் மந்தமடைந்து வரும் சூழலில், சீனாவின் பொருளாதார மீட்சி உலகப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று வால் ஸ்ட்ரீட் நாளேடு கூறியது.


அதே வேளையில், உயர் நிலை திறப்பு, பொருளாதாரத்துக்கு உயிராற்றலைக் கொண்டு வருவதைச் சீனா தொடர்ந்து முன்னேற்றி வருகின்றது. சீன வளர்ச்சி மன்றம், போ ஆவ் ஆசிய மன்றக் கூட்டம், சீன ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகப் பொருட்காட்சி முதலியவை சீனாவையும் உலகத்தையும் நெருக்கமாக இணைத்து வந்துள்ளன. தவிரவும், இவ்வாண்டின் முதல் 3 திங்களில், சீனாவின் சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகை, 9 இலட்சத்து 89 ஆயிரம் கோடி யுவானாகும்.

இது, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 4.8 விழுக்காடு அதிகரித்தது. இவ்வாண்டு உலகப் பொருளாதார அதிகரிப்பில் சீனப் பொருளாதாரப் பங்களிப்பு, சுமார் மூன்றில் ஒரு பங்கை எட்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கருத்து தெரிவித்தார்.


சீனாவில் முதலீடு செய்து, சீனாவில் வேரூன்றுவது சிறந்த எதிர்காலத்தைத் தேர்ந்தெடுப்பதேயாகும் என்று பன்னாட்டு நிறுவனங்களின் பொறுப்பாளர் கருத்து தெரிவித்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author