ஆடி மாத பெளர்ணமியையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலில் பெளர்ணமி, அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம், அந்த வகையில் ஆடி மாத பவுர்ணமியையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து, கிரிவலம் சென்றனர்.
அலைமோதிய கூட்டம் காரணமாக ஒத்தவாடை தெருவிலிருந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக பக்தர்கள் ராஜகோபுரம் மற்றும் அம்மனி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனரெ.
பின்னர் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் திருமஞ்சனம் கோபுரம் வழியாக வெளியே அனுப்பப்பட்டனர்.