மக்கெள தாய்நாட்டிற்குத் திரும்பிய 25வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்ட மாநாடு மற்றும் மக்கெள சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் 6ஆவது அரசின் பதவி ஏற்பு விழா டிசம்பர் 20ஆம் நாள் நடைபெற்றன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் இதில் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்தினார்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், மக்கெள தாய்நாட்டிற்கு திரும்பிய கடந்த 25 ஆண்டுகளில், சீன அரசு மற்றும் உள் பிரதேசத்தின் பெரும் ஆதரவுடன் மக்கெள சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசு ஒன்றுபட்டு சமூகத்தின் அனைத்துத் துறைகளையும் தொடர்ந்து வழிநடத்தி வருகின்றது.
மக்கெளவின் தனிச்சிறப்பு வாய்ந்த “ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்” என்ற கொள்கை, பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
இக்கொள்கையால், மக்கெளவில் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதோடு, சர்வதேசச் செல்வாக்கும் பெரிய அளவில் உயர்ந்துள்ளது என்றார்.
மேலும் ஷிச்சின்பிங் கூறுகையில், ஹாங்காங் மற்றும் மக்கௌவின் நீண்டகால செழிப்பு மற்றும் நிதானத்தைப் பேணுவதற்கும், “ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்” என்ற கொள்கையின் நடைமுறையைத் தொடர்ந்து முன்னேற்றுவதற்கும் பின்வரும் நான்கு விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்று ஹாங்காங் மற்றும் மக்கெள தாய்நாட்டிற்குத் திரும்பிய நடைமுறை அனுபவம் நமக்குக் கூறுகிறது என்றார்.
முதலாவது, ஒரே நாடு என்ற அடித்தளத்தை கடைப்பிடித்து, “இரண்டு அமைப்பு முறைகளின்” நன்மைகளை நன்கு பயன்படுத்த வேண்டும்.
இரண்டாவது, உயர்நிலை பாதுகாப்பைப் பேணிகாத்து, உயர் தர வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும்.
மூன்றாவது, சிறப்பு மேம்பாட்டுக்குப் பங்காற்றி, ஒன்றுக்கு ஒன்றுடனான தொடர்புகளை வலுப்படுத்த வேண்டும்.
நன்காவது, முக்கிய மதிப்புகளை வெளிக்கொணர்ந்து, சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்த வேண்டும் என்றார்.