சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் டிசம்பர் 20ஆம் நாள் காலை மக்கெளவில் மக்கெள சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் புதிய நிர்வாக அதிகாரியாக பதவியேற்றுக் கொண்ட சென் ஹாவ் ஹுய்யைச் சந்தித்துப் பேசினார்.
மக்கெள சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் 6ஆவது நிர்வாக அதிகாரியாக பதவியேற்றுக்கொண்ட சென் ஹாவ் ஹுய்க்கு ஷிச்சின்பிங் வாழ்த்து தெரிவித்தார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், நிர்வாக அதிகாரி சென் ஹாவ் ஹுய்யின் தலைமையில், புதிய சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசானது, சமூகத்தின் அனைத்துத் துறைகளையும் ஒன்றிணைத்து,“ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்” என்ற கொள்கையைப் பன்முகங்களிலும் துல்லியமாகவும் உகந்த முறையிலும் செயல்படுத்தி, தேசிய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களை உறுதியுடன் பாதுகாத்து, மக்கெளவின் தனிச்சிறப்புத் தகுநிலை மற்றும் நன்மைகளுக்கு முழுமையாகப் பங்காற்றி, மக்கெளவின் சிறந்த வளர்ச்சிக்குப் பங்காற்ற வேண்டும் என்றார்.
மேலும், நிர்வாக அதிகாரி சென் ஹாவ் ஹுய், மக்கெள சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசின் கடமைகளைச் சிறப்பாக நிறைவேற்ற மத்திய அரசு அவருக்கு முழுமையாக ஆதரவளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.