சீனாவும் அமெரிக்காவும் டிசம்பர் திங்கள் நடுப் பகுதி முதல், பல்வேறு நிலைகளில் தொடர்பு மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்க அரசு பதவி மாற்றத்தின் இடைக்காலத்தில், சீன-அமெரிக்க பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பு நிதானமாக வளர்ந்து வருவது என்பது ஒரு ஆக்கப்பூர்வமான சமிக்கையாகும். சீன-அமெரிக்க தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 45 ஆண்டு கால அனுபவங்களின்படி, இரு நாடுகளும் ஒத்துழைப்பின் மூலம் மட்டுமே நலன்களைப் பெற முடியும். அதை விடுத்து இரு நாடுகளும் போட்டியிட்டுக் கொண்டால் அதனால் தீங்குகளே விளையும்.
தற்போதைய நிலைமையில், உலகில் 2 மிகப் பெரிய பொருளாதார நாடுகளான சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான கூட்டு நலன்கள் குறைக்கவில்லை. அதன் பதிலாக மேலும் அதிகரித்து வருகின்றன. இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை மேற்கொள்ள விரும்பினால், கூட்டு நலன்களைப் பேணிக்காத்து, கூட்டாகக் கவனிப்பதற்குரிய விவகாரங்களைச் சரியாகக் கையாண்டு, கூட்டு அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்த முடியும்.
போட்டியிடுவது என்பது, சீன-அமெரிக்க உறவின் முழுமையான அம்சமல்ல. போட்டியிடுவதோடு, ஒத்துழைப்புகளை வலுப்படுத்த வேண்டும். கூட்டு நலன் தந்து கூட்டாக வெற்றி பெறுவது என்பது இரு நாட்டு ஒத்தழைப்புக்கான சாராம்சமாகும். சீன-அமெரிக்க உறவின் எதிர்காலமாக இரு நாட்டு மக்கள் உள்ளனர். இதன் அடிப்படை, அரசு சாரா ரீதியில் உள்ளது. இலைஞர்கள் என்பது எதிர்காலம் தான். இதனால், இரு நாட்டு மனிதத் தொடர்பு மற்றும் மனிதப் பண்பாடு பரிமாற்றத்திற்குரிய அடிப்படைகளை முன்னெடுக்க வேண்டும். அதோடு, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளுக்கு உயிர் ஆற்றலையும் கொண்டு வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.