ஜப்பான் ஏர்லைன்ஸ் வியாழனன்று சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டதாகக் கூறியது.
இதன் விளைவாக சில உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் தாமதம் மற்றும் டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டது.
இது குறித்து X-இல் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், விமான நிறுவனம் அதன் உள் மற்றும் வெளிப்புற அமைப்புகளில் ஒரு கணினி செயலிழப்பு ஏற்பட்டதை கண்டறிந்தது மற்றும் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டது.
“இன்று காலை 7:24 மணி முதல் நிறுவனம் மற்றும் அதன் வாடிக்கையாளர்களை இணைக்கும் நெட்வொர்க் உபகரணங்களில் சிஸ்டம் கோளாறு ஏற்பட்டுள்ளது. இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாங்கள் உறுதி செய்தவுடன் அடுத்த அறிவிப்பில் உங்களுக்கு அறிவிப்போம். இதனால் ஏற்பட்ட அசௌகரியத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்றது.