தென் சீன கடலில் ‘சாம்பல் மண்டலம்’ தந்திரத்தைச் செயல்படுத்தி வரும் அமெரிக்கா பிலிப்பைன்ஸ்

தென் சீனக் கடலில் சீனக் கப்பல்களின் செயல்பாடுகளைச் சமாளிக்கும் விதமாக, சாம்பல் மண்டல தந்திரத்தை வகுத்துள்ளதாக பிலிப்பைன்ஸ் கடற்படையின் தலைமைத் தளபதி சமீபத்தில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

‘சாம்பல் மண்டல தந்திரம்’ என்பது, ராணுவ இலக்குகளுக்காக பயன்படுத்தப்படும் ராணுவ சொற்கள் ஆகும். ஆனால், ராணுவ வழிமுறைக்குப் பதிலாக, வேறு வழிமுறையின் மூலம் ராணுவ இலக்குகளை நனவாக்கும் நிலையில், சாம்பல் மண்டல தந்திரம் என அழைக்கப்படுகிறது.

உண்மையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக, பிலிப்பைன்ஸ் தரப்பு, தென் சீனக் கடலில் இத்தகைய தந்திரத்தைச் செயல்படுத்தியுள்ளது. இதில், பொது மக்களின் படகில் ஆயுதங்களை மறைத்து வைப்பது, பொருளாதார ரீதியான அச்சுறுத்தல்,  அறிவியல் ஆய்வு என்ற பெயரில் பாறைத்தீவுகளைக் கைப்பற்றும் உள்நோக்கத்தை மறைப்பது, சீனாவுக்கு எதிராக புரிதல் போர் தொடுத்தல், சர்வதேச செய்தி ஊடகங்களின் மூலம் பரபரப்பை ஏற்படுத்துவது ஆகிய 5 வழிமுறைகள் அடக்கம்.

பிலிப்பைன்ஸ் தரப்பினால் மட்டும், சாம்பல் மண்டல தந்திரம் செயல்படுத்தப்பட முடியாது. அதன் பின்புறத்தில் துணை நிற்கும் அமெரிக்காவின் ஆதரவு இன்றிமையாதது என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

அமெரிக்கா தனது இந்தோ-பசிபிக் உத்திபூர்வத்தை முன்னெடுப்பதற்கான முக்கிய வழிமுறையாகவே சாம்பல் மண்டல தந்திரத்தைப் பயன்படுத்திக் கொள்கிறது. தூதாண்மை, பொருளாதாரம் உள்பட பல துறைகளில் இந்தத் தந்திரத்தைச் செயல்படுத்தி வருகிறது. பிலிப்பைன்ஸ், இந்த முழு சங்கிலியின் ஒரு பகுதியாக உள்ளது. 2017ஆம் ஆண்டு, அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் உத்திபூர்வம் முன்வைக்கப்பட்டது முதல், சாம்பல் மண்டல தந்திரம் முக்கிய வழிமுறைகளில் ஒன்றாக மாறியுள்ளது.

தென் சீன கடல் பிரச்சினையில் சீனாவுக்கு எதிராக சாம்பல் மண்டல தந்திரத்தை அமெரிக்காவும் பிலிப்பைன்ஸும் இணைந்து செயல்படுவதில் பல உள்நோக்கங்கள் உள்ளது என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர். தென் சீன கடலில் அமெரிக்க ராணுவம் தொடர்ச்சியாக இருப்பதை உறுதி செய்வது, இந்தோ-பசிபிக் உத்திபூர்வத்தை முன்னெடுத்து செல்வது, சீனாவுக்கும் அண்டை நாடுகளுக்கும் இடையே கடல்சார் சர்ச்சைகளில் தலையிட்டு, சீனாவின் வளர்ச்சியைத் தடுப்பது போன்ற உள்நோக்கங்கள் உள்ளன.

தனது மிகவும் நெருங்கிய கூட்டணி மற்றும் கூட்டாளி நாடுகளுக்குக் கூட, அமெரிக்காவின் ஆதரவு கிடைக்கும் என்பது உறுதியில்லை. எனவே, இறுதியில், சாம்பல் மண்டல தந்திரத்தில் யார் விலை கொடுப்பார்கள் என்ற கேள்விக்கு பதில், அமெரிக்கா உள்பட தொடர்புடைய தரப்புகளுக்கு தெரியும்.

Please follow and like us:

You May Also Like

More From Author