சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்த நிலையில் இன்று 80 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 56 ஆயிரத்து 800 ரூபாய்க்கும், ஒரு கிராம் 7,100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம் 7745 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 61960 ரூபாயாகவும் இருக்கிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 99 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 99,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.