சமீபத்தில் அமெரிக்க அரசுத் தலைவர் 2025 நிதி ஆண்டு தேசிய பாதுகாப்பு அங்கீகாரப் பொதுச் சட்டம் ஒன்றை வெளியிட்டார்.
இச்சட்டம், அமெரிக்காவின் உள்நாட்டுச் சட்டமாகும். ஆனால், இச்சட்டத்தின் வழி, அமெரிக்கா சீனாவின் உள்விவகாரத்தில் வெளிப்படையாக தலையிட்டுள்ளது.
அண்மைக்காலமாக, அமெரிக்க அரசு தைவானுக்கு தொடர்ந்து ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது. இது குறித்து அமெரிக்காவுக்கு இரட்டை உள்நோக்கங்கள் உள்ளன.
ஒரு புறம், தொடர்புடைய குழுமங்கள் மற்றும் காட்சியின் நலன்களை பெருமளவில் பேணிக்காக்க வேண்டும். அமெரிக்காவின் ஆயுத உற்பத்தி நிறுவனங்களின் விற்பனை நிர்பந்தத்தைத் தணிவுப்படுத்தலாம். மற்றொரு புறம், சில இன்னல்களை ஏற்படுத்தலாம். ஆனால், இச்சிக்கலானது, அடுத்த அரசுத் தலைவர் பதவி காலத்தின் போது, சீன-அமெரிக்க உறவை கையாள்வதில் சிக்கல்களைக் கொண்டு வரும் என்று சீனச் சமூக அறிவியல் கழகத்தைச் சேர்ந்த தைவான் ஆய்வகப் பிரிவின் துணை ஆய்வாளர் லியூ காங்யூ தெரிவித்தார்.
20 நாட்களுக்குப் பிறகு, அமெரிக்காவின் புதிய அரசின் பதவி காலம் தொடங்கவுள்ளது. தைவான் நீரிணை இரு கரைகளின் அமைதி மற்றும் நிதானத்தை அமெரிக்கா உண்மையாக எதிர்பார்த்தால், தைவான் பிரச்சினையை சீராகக் கையாள வேண்டும்.
இரு தரப்புகளுக்கிடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள 3 கூட்டறிக்கைகளை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும். சீனாவின் மீதான அரசியல் வாக்குறுதியை நனவாக்க வேண்டும். தைவான் சுதந்திர சக்தி என்பதை உறுதியாக எதிர்த்து, சீனாவின் சமாதான ஒன்றிணைப்புக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.