இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையே கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் போர் நடந்து வருகிறது. இதில் இரண்டு தரப்பினருக்கும் ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பாலஸ்தீனியர்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இஸ்ரேல் சைடவுன் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில் 20 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோன்று அல்- அவுதா மருத்துவமனையின் அருகே முகாமிட்டு தங்கி இருந்த பாலஸ்தீனர்களிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தபோது இஸ்ரேல் அப்பகுதியில் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஐந்து பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.