இன்னும் சில மணிநேரங்களில் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், பிரான்ஸின் அதிவேக ரயில்கள் மீது பெரும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸின் அதிவேக TGV ரயில்கள் “தீங்கிழைக்கும் செயல்களால்” தாக்கப்பட்டதாக பிரான்சின் தேசிய இரயில் ஆபரேட்டர் SNCF தெரிவித்துள்ளது.
“இது TGV நெட்வொர்க்கை முடக்க பெரிய அளவில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாகும்” என்று SNCF தெரிவித்துள்ளது.
பெரும் தாக்குதலால், லில்லி மற்றும் பாரிஸ் இடையேயான அதிவேகப் பாதையில் காலை 5:15 மணி முதல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலால் பல வழித்தடங்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
இந்த வார இறுதியில் பழுதான ரயில்கள் சரி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.