பிரிட்டனின் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன், திங்களன்று தனது கீமோதெரபி சிகிச்சையை முடித்துவிட்டதாகவும், இந்த ஆண்டு முழுவதும் பொது பணிகளில் ஈடுபடவிருப்பதாகவும், அதற்கான அட்டவணையை பராமரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“புற்றுநோய் இல்லாமல் இருப்பது இப்போது எனது முதன்மையான விஷயம்,” என்று அவர் ஒரு வீடியோ செய்தியில் கூறினார்.
இளவரசி கேட், ஏறக்குறைய ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவரது உடல்நிலை குறித்த பரவலான ஊகங்களைத் தொடர்ந்து, வெளியிடப்படாத புற்றுநோய் பாதிப்பு தனக்கு கண்டறியப்பட்டதை அவர் ஒப்புக்கொண்டார்.
அதன் பின்னர் பொதுவெளியில் அவர் தென்படவே இல்லை.
தற்போது வெளியிட்ட வீடியோ பதிவில், “கடந்த ஒன்பது மாதங்கள் ஒரு குடும்பமாக எங்களுக்கு நம்பமுடியாத அளவிற்கு கடினமாக இருந்தது” என்று கேட் மிடில்டன் கூறினார்.