சீனாவின் அரை மின் கடத்தி தொழில் துறையின் தொடர்புடைய கொள்கைகள் மீது 301 ஆவது விதியின் கீழ் அமெரிக்கா புலனாய்வு செய்யத் தொடங்கியுள்ளது என்று அந்நாட்டு வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் டிசம்பர் 23ஆம் நாள் தெரிவித்தது.
இந்நிலையில், சீனச் சர்வதேச வர்த்தகத்தை ஊக்குவிக்கும் கவுன்சில் இன்று நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், சீனத் தொழில் மற்றும் வணிக துறையின் சார்பில், அமெரிக்காவின் இந்த முடிவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உலக வர்த்தக அமைப்பின் தொடர்புடைய விதிகளை அமெரிக்கா பின்பற்ற வேண்டும். தனிச்சையாக செயல்பாட்டு நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும்.
பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாலோசனையின் மூலம் தொழில் துறையின் ஒத்துழைப்புகளை மேம்படுத்தி, உலகத் தொழில் சங்கிலி மற்றும் விநியோக சங்கிலியைக் கூட்டாகப் பேணிக்காத்து, உலகப் பொருளாதாரத்திற்கு மேலதிகமான உந்து ஆற்றலையும் நிதானத்தையும் கொண்டு வர வேண்டும் என்று இக்கவுன்சிலின் செய்தித்தொடர்பாளர் சுன் சியௌ தெரிவித்தார்.