ரஷ்யா, உக்ரேனிய நகரமான டினிப்ரோவை குறிவைத்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) ஏவியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே 1,000 நாட்களுக்கும் மேலாக நடைபெறும் போரில் இதுபோன்ற சக்திவாய்ந்த அணுசக்தி திறன் கொண்ட ஆயுதம் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்று வியாழனன்று உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது.
முன்னதாக உக்ரைன், அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் நாடுகள் தந்து உதவிய ஏவுகணைகளை அதன் எல்லைகளுக்குள் ஏவியதால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷ்யா எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ICBM கள் அணு ஆயுதங்களை ஏந்தி செல்ல வடிவமைக்கப்பட்ட மூலோபாய ஆயுதங்கள் மற்றும் ரஷ்யாவின் அணுசக்தி ஆயுதங்களின் முக்கிய பகுதியாகும்.