அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு  

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அநேக இடங்களிலும் (வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்) மற்றும் புதுவையிலும் மழை பெய்துள்ளது.
காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பெய்துள்ளது. இந்நிலையில், அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு:-
வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
20.10.2024 அன்று வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், கரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

You May Also Like

More From Author