ஜூலை 2 முதல் 6ஆம் நாள் வரை, அஸ்தானாவில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்கள் குழுவின் 24வது கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் பங்கெடுக்கவுள்ளார்.
மேலும், கசகஸ்தானின் அரசுத் தலைவர் டோகாயேவ், தஜிகிஸ்தான் அரசுத் தலைவர் ரஹ்மான் ஆகியோரின் அழைப்பை ஏற்று, ஷி ச்சின்பிங் இந்த இரு நாடுகளில் அரசு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் அம்மையார் ஜுன் 30ஆம் நாள் தெரிவித்தார்.