பரப்பாடியில் புதிய நூலக கட்டடம் திறப்பு

பரப்பாடியில் புதியதாக கட்டப்பட்டுள்ள நூலகத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி திறந்து வைத்ததை தொடர்ந்து நெல்லை கலெக்டர் குத்து விளக்கு ஏற்றினார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலையில் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக திருநெல்வேலி மாவட்டத்தில் 4 புதிய நூலக கட்டிடங்களை திறந்து வைத்தார்கள்.
அதில் நான்குநேரி யூனியனில் உள்ள பரப்பாடியில் புதிதாக கட்டப்பட்ட நூலகம் திறந்து வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நூலகத்தில் நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார், நெல்லை எம். பி., ராபர்ட் புரூஸ், மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலையில் நூலகத்தில் குத்து விளக்கேற்றி இனிப்புகள் வழங்கி பணிகளை தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சிசுந்தரம், நூலக ஆய்வாளர் கணேசன், கண்காணிப்பாளர் சங்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்தையா, ஒன்றிய பணி மேற்பார்வையாளர்
ஆறுமுககனி, இலங்குளம் பஞ்., தலைவர் தலைவர் இஸரவேல் பிரபாகரன் அவர்கள், துணைத் தலைவர் வள்ளித்தாய் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

You May Also Like

More From Author