இவ்வாண்டு முதல், வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பது என்ற பெயரில் அமெரிக்கா பல்வேறு வழிமுறைகளில் கூடுதல் சுங்க வரியை வசூலிக்க முயன்று வருகின்றது.
அமெரிக்காவின் இச்செயல், உலக அளவில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளதோடு, அமெரிக்கச் சமூகத்திடமும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கோல்ட்மான் சாக்ஸ் குழுமம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், எதிர்வரும் ஓராண்டில் அமெரிக்கப் பொருளாதாரத்தின் பின்னடைவு விகிதமானது 35விழுக்காட்டிலிருந்து 45விழுக்காடாக அதிகரிக்கும் எனச் சுட்டப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவின் சுங்க வரிக் கொள்கை அமெரிக்காவுக்கே மிகக் கடுமையான தீங்கினை விளைவிக்கும் என்றும், டிரம்பின் இந்த நடவடிக்கையால் உலக அளவில் அமெரிக்காவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது என்றும், அமெரிக்காவின் இரண்டு முன்னாள் நிதித் துறை அமைச்சர்களான லாரி சம்மர்ஸும், யெல்லனும் குற்றஞ்சாட்டினர்.
அமெரிக்காவின் பகுத்தறிவற்ற செயலை விட, சீனா சொந்த செயல்களின் மூலம் உலகத்துக்கு மேலதிக நிலைப்புத் தன்மையைக் கொண்டு வந்துள்ளது.
முதலில், சீனாவின் நிலைப்பாடு உறுதியானதும் நிலையானதுமாகும். ஒன்றுக்கொன்று நலன் அளித்து கூட்டு வெற்றி பெறுவது சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக உறவின் சாராம்சமாகும். சமமான பேச்சுவார்த்தை மற்றும் கூட்டு நலன் தரும் ஒத்துழைப்பு மூலம், இரு தரப்பும் பொருளாதார மற்றும் வர்த்தகக் கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க முடியும். அமெரிக்கா முன்வந்தால் நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயார். இல்லையெனில் போரிடவும் தயார் என்று அமெரிக்கா தொடுத்த சுங்க வரிப் போர் குறித்து சீனா பலமுறை வலியுறுத்தியுள்ளது.