கடந்த மார்ச் 15 ஆம் தேதி வடகொரியாவின் 15வது உச்ச மக்கள் பேரவைக்கான தேர்தல் நடைபெற்றது.
இதில் கிம் ஜாங் உன்னின் தொழிலாளர் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அனைத்து இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 99.99% பேர் வாக்களித்துள்ளனர். வெளிநாட்டில் இருப்பவர்கள் தவிர மற்ற அனைவரும் வாக்களித்ததாக அரசு ஊடகமான KCNA தெரிவித்துள்ளது.
கிம் ஜாங் உன்னுக்கு ஆதரவாக 99.93% வாக்குகள் பதிவாகியுள்ளன. கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங்-உம் தனது தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
ஆச்சரியமான விஷயமாக, 0.07% பேர் வேட்பாளர்களுக்கு எதிராக வாக்களித்துள்ளதாக அரசு ஊடகம் முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ளது.
1957க்குப் பிறகு இவ்வளவு பெரிய தேர்தலில் எதிர்ப்பு வாக்குகள் பதிவாகியிருப்பது இதுவே முதல்முறை.
வடகொரியா தேர்தல் 2026: 99.93% வாக்குகள் பெற்று கிம் ஜாங் உன் வெற்றி!
