திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விடுமுறை தினமான நேற்று அதிகளவு பக்தர்கள் திரண்டனர். சுவாமியை தரிசிக்க நீண்ட நேரம் காத்திருந்தனர்.
அதன்படி 70,679 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 21,717 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். மேலும் பக்தர்கள் கோயிலில் செலுத்திய உண்டியல் காணிக்கை நேற்று மாலை கணக்கிடப்பட்டது.
அதில் 4.36 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இன்று காலை கோயிலுக்கு வரும் பக்தர்கள் நேரடியாக சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் சுமார் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். 300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.