திமுகவின் A டீம் தான் விஜய்; கமல் ஒரு சீட்டுக்காக இணைந்தது போல் விஜயும் இணைவார்” – அர்ஜுன் சம்பத்திமுகவின் A டீம் தான் விஜய், கமல் ஒரு சீட்டுக்காக இணைந்தது போல் விஜயும் இணைவார் என இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் கூறியுள்ளார்.
தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜுன், “தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கிறிஸ்தவர்கள் இவர்களெல்லாம் சேர்ந்து தமிழ்நாட்டில் எப்படியாவது கிறிஸ்தவர் ஒருவரை முதலமைச்சராக்க முயற்சிக்கின்றனர்.
கிறிஸ்தவ மிஷனரிகள் எல்லாம் சேர்ந்து கொண்டு வந்ததுதான் தமிழக வெற்றிக் கழகம். பாஜகவை பற்றி பேசுவதற்கெல்லாம் விஜய்க்கு தகுதியே இல்லை. தவெக கட்சி தமிழக மக்களால் புறக்கணிக்கப்படும். விஜய் கிறிஸ்தவ நிறுவனங்களின் கைப்பாவையாக செயல்படுகிறார்.
திமுகவின் A டீம் தான் விஜய், கமல் ஒரு சீட்டுக்காக திமுகவில் இணைந்தது போல் விஜயும் இணைவார். கடந்த தேர்தலுக்கு கமல்ஹாசனை திமுக தயார் செய்து வைத்திருந்தது. தற்போது அந்த வேலையை விஜய் செய்கிறார். இந்த தேர்தலுக்கு விஜய்யை திமுக தயார் செய்து வைத்திருக்கிறது” என்றார்.