சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் உள்ளூர் நேரப்படி ஜூலை 6ஆம் நாள் ரியோ டி ஜெனிரோவில் பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் 17ஆவது உச்சிமாநாட்டின் முதலாவது கட்ட கூட்டத்தில் பங்கேற்று, அமைதி மற்றும் பாதுகாப்பு, உலக நிர்வாகச் சீர்த்திருத்தம் ஆகிய நிகழ்ச்சி நிரல் குறித்து உரை நிகழ்த்தினார். பிரேசில் அரசுத் தலைவர் லூலா இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.
லீச்சியாங் கூறுகையில், தற்போது உலகின் நூறு ஆண்டுகாலத்தில் காணாத மாற்றங்கள் தீவிரமாக ஏற்பட்டு வருகின்றன. சர்வதேச விதிகளும் ஒழுங்கும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பலதரப்புவாத அமைப்பு முறையின் செயல்திறன் மற்றும் செல்வாக்கு பலவீனமாக மாறியுள்ளன. இச்சூழலில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த கூட்டு கலந்தாய்வு, கூட்டு கட்டுமானம் மற்றும் கூட்டு பகிர்வு என்பதென்ற உலக நிர்வாக கண்ணோட்டம் காலத்திற்கான முக்கியத்துவத்தைப் பெரிதும் காட்டியுள்ளது.
பல்வேறு பிரிக்ஸ் நாடுகளுடன் இணைந்து, உலக நிர்வாகம் மேலும் நியாயமான ஒழுங்கான மற்றும் உயர் செயல்திறனுடன் கூடிய திசையை நோக்கி வளர்த்து மேலும் அருமையானதொரு உலகத்தைக் கூட்டாக உருவாக்க சீனா விரும்புவதாக லீச்சியாங் தெரிவித்தார்.
பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் 17ஆவது உச்சிமாநாட்டின் ரியோ டி ஜெனிரோ அறிக்கை இக்கூட்டத்தில் வெளியிடப்பட்டது.