ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாட்டுத் தலைவர்கள் கவுன்சிலின் 23ஆவது கூட்டம் பெய்ஜிங் நேரப்படி ஜுலை 4ஆம் நாள் பிற்பகல் துவங்கியது.
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, பெய்ஜிங்கில் இருந்து காணொளி வழியாக இக்கூட்டத்தில் பங்கெடுத்து முக்கிய உரை நிகழ்த்தினார்.
சிக்கலாக மாறி வரும் உலகில் மனிதகுலம் முன்கண்டிராத சவால்களை எதிர்கொள்கிறது. இந்நிலையில், அருமையான வாழ்க்கை மீதான பல்வேறு நாட்டு மக்களின் எதிர்பார்ப்புதான், எங்கள் குறிக்கோளாகும். அமைதி, வளர்ச்சி, ஒத்துழைப்பு, கூட்டு வெற்றி ஆகியவற்றை நோக்கும் கால ஓட்டம் தடுக்கப்பட முடியாதது என்று ஷி ச்சின்பிங் குறிப்பிட்டார்.
இதனிடையே, சரியான திசையை உறுதியுடன் கடைப்பிடித்து, ஒற்றுமை மற்றும் பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்துவது, பிரதேச அமைதியைப் பேணிக்காத்து, பொது பாதுகாப்பை உத்தரவாதம் செய்வது, நடைமுறை ஒத்துழைப்பில் கவனம் செலுத்தி, பொருளாதார மீட்சியை விரைவுபடுத்துவது, தொடர்பு மற்றும் பரஸ்பர கற்றலை வலுப்படுத்தி, மக்களுக்கிடையிலான நட்புறவை மேம்படுத்துவது, பரதரப்புவாதத்தை நடைமுறைப்படுத்தி, உலகளாவிய மேலாண்மையை முழுமைப்படுத்துவது ஆகிய 5 முன்மொழிவுகளை அவர் வழங்கினார்.
மேலும், இக்கூட்டத்தில், ஈரான் இவ்வமைப்பின் உறுப்பு நாடாக ஏற்றுக்கொள்ளப்படும். பெலாரஸ் இவ்வமைப்பில் சேர்வது பற்றிய குறிப்பாணை கையொப்பமிடப்படும். இது, இவ்வமைப்பின் ஈர்ப்பு ஆற்றலை காட்டுகிறது. இந்த இரு நாடுகளுக்கும் வாழ்த்துகள் என்றும் அவர் தெரிவித்தார்.