அயோத்தி ராமர் கோவிலில் ராமரின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில் 500க்கும் மேற்பட்ட சிலைகள் தயாராகி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராம் ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது.
அன்றைய தினம் நண்பகல் 12.45 மணியளவில் கர்ப்ப கிரகத்தில் மூலவரான குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
இந்நிலையில் அயோத்தியின் ராம்சேவக்புரத்தில் பகவான் ஸ்ரீ ராமரின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில் 500க்கும் மேற்பட்ட சிலைகள் தயாராகி வருகின்றனர்.
இந்த சிலைகள் ராமர் கோவிலுக்குச் செல்லும் நடைபாதையில் வைத்து அலங்கரிக்கப்படும் என்று கோவில் நிர்வாகத்தால் கூறப்படுகிறது.
இந்த சிலைகள் இருக்கும் காணொளி வெளியாகியுள்ளது. இதில் பகவான் ஸ்ரீ ராமரின் வாழ்க்கையின் நிகழ்வுகளை நினைவு கூறும் விதத்தில் இந்த சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.