அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்துள்ளதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு இடி மின்னலுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இதுவரையில் 59 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளதோடு இதில் 21 பேர் குழந்தைகள் என்பது தான் மிகவும் வேதனையான சம்பவமாக அமைந்துள்ளது.
தொடர்ந்து இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் வலி எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ள நிலையில் ஏராளமான ஒரு காணாமல் போனதால் அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரையில் வெள்ளத்தில் சிக்கிய 850 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.