ஆசிய-ஆப்பிரிக்காவின் மறுமலர்ச்சிக்கான கனவுகளும் கூட்டு நலன் தரும் ஒத்துழைப்பின் ஆழமான நடைமுறையாக்கமும்”——ஷி ச்சின்பிங் சிந்தனையின் ஆற்றல் 02

10 ஆண்டுகளுக்கு முன்பு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஆசிய-ஆப்பிரிக்க தலைவர்கள் கூட்டத்தில், ஆசிய-ஆப்பிரிக்க மறுமலர்ச்சி கனவு என்னும் கண்ணோட்டத்தை வெளியிட்டார். கடந்த 10 ஆண்டுகளில், சுமார் 600 கோடி ஆசிய-ஆப்பிரிக்க நண்பர்கள் நடைமுறை நடவடிக்கைகள் மூலம், உலக மேலாண்மைக்கான முன்மாதிரியை வெளிப்படுத்தியுள்ளனர்.

2024ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 4ஆம் நாளில், தாய்லாந்தில், சீனாவின் புதிய எரியாற்றல் வானகமான BYD வாகன தயாரிப்பு தொழிற்சாலை அதிகாரப்பூர்வமாக இயங்கத் தொடங்கியுள்ளது.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வழங்கியுள்ள முன்மொழிவுகளின்படி, ஆசிய-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு, தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில், வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்புகளை விரிவாக்கி, கூட்டு நலன் தரும் புதிய சர்வதேச உறவை உருவாக்க வேண்டும். ஒத்துழைப்பு மற்றும் கூட்டு நலன் தரும் கண்ணோட்டத்தின் மூலம், வளரும் நாடுகளுக்கும் உலகத்துக்கும் இடையிலான தொடர்பு மற்றும் நலன்கள் மேலும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய-ஆப்பிரிக்க மறுமலர்ச்சி கனவு:600 கோடி மக்களின் வாழ்க்கை தரம் மாற்றப்பட்டுள்ளது

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் மூலம், ஆசிய-ஆப்பிரிக்க பொருளாதாரத்தின் முக்கிய வழித் தடம் உருவாக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளின் இணைப்பு, அறிவியல் தொழில் நுட்பத்தின் பரிமாற்றம் ஆகியவற்றின் மூலம் ஆசிய-ஆப்பிரிக்காவின் உள்ளூர் தொழில் துறை சங்கிலியை உருவாக்கி, மூலவள ஏற்றுமதி மீதான சார்பளவைக் குறைத்து, சுய வளர்ச்சி ஆற்றலை வலுப்படுத்தியுள்ளது.

 பரந்த ஒத்துழைப்புகளின் மூலம் தற்பட அற்புதமான ஆசிய-ஆப்பிரிக்க வளர்ச்சி

அரசியல் கருத்து வெளியீட்டு உரிமை அமைப்பை மீண்டும் திருத்த வேண்டும்.

பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்புமுறை, சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு கருத்தரங்கு உள்ளிட்ட மேடைகளின் மூலம், உலகின் கருப்பொருட்களில் வளரும் நாடுகளின் கருத்து வெளியீட்டு உரிமை வலுப்படுத்தப்பட்டுள்ளது. விதிகளைப் பின்பற்றும் நிலையில் இருந்து விதிகளை வகுக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உயர் நிலைக்கு முன்னேற்றும் கனவு நனவாக்கப்பட்டது.

சீன அரசு தலைவர் ஷிச்சின்பிங் வழங்கியுள்ள உலக பாதுகாப்பு முன்மொழிவின்படி, கூட்டு பகிர்வு, பன்நோக்கம், ஒத்துழைப்பு, தொடரவல்ல புதிய பாதுகாப்புக் கண்ணோட்டம், ஆசிய-ஆப்பிரிக்க ஒத்துழைப்புக்கான கூட்டு நலன் தருவதற்கு வலிமையான உத்தரவாதம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசிய-ஜகார்த்தா தொடர்வண்டி, தென்கிழக்காசியாவின் முதலாவது உயர்வேக தொடர்வண்டியாகும்

 புதிய வரலாற்றுத் துவக்க புள்ளியில், கடுமையான அறைகூவல்களை எதிர்நோக்கி, அமைதியைப் பின்பற்றும் யாவான் எழுச்சி, மக்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. கூட்டு வெற்றி பெறுவது என்ற வளர்ச்சி கண்ணோட்டம், பரந்தப்பட்ட வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

More From Author