சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் இத்தாலி தலைமையமைச்சர் ஜார்ஜியா மெலோனி அம்மையாருடன் நவம்பர் 22ஆம் நாள் ஜோகன்னஸ்பர்கில் சந்தித்து பேசினார்.
அப்போது லீ ச்சியாங் கூறுகையில், இத்தாலியுடனான பாரம்பரிய நட்புறவை வெளிக்கொணர்ந்து, பரஸ்பர திறப்பை முன்னேற்றி, புதிதாக வளரும் தொழில்களின் ஒத்துழைப்புகளை விரிவாக்கி, கூட்டு வளர்ச்சி மற்றும் செழுமையை முன்னேற்றி, மேலும் நிதானமான பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவை உருவாக்க சீனா விரும்புவதாக தெரிவித்தார். மேலும், ஐ.நா, ஜி20 உள்ளிட்ட பலதரப்புக் கட்டுக்கோப்புக்குள் இரு தரப்பும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, சர்வதேச சமூகம் பலதரப்புவாதத்தைச் செயல்படுத்தும் மனவுறுதியை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மெலோனி கூறுகையில், சீனாவுடன் இரு தரப்பு ஒத்துழைப்பு அமைப்புமுறையைச் செவ்வனே பயன்படுத்தி, பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், மானுடவியல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, பலதரப்புவாதத்தைக் கூட்டாகப் பேணிக்காக்க இத்தாலி விரும்புவதாக தெரிவித்தார்.
