தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி பரலோக மாதா பேராலய விண்ணேற்பு விழாவை முன்னிட்டு வரும் 14ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள புகழ்பெற்ற காமநாயக்கன்பட்டி தூய பரலோக மாதா பேராலய விண்ணேற்பு பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் இந்த ஆண்டுக்கான திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது. அன்னையின் விண்ணேற்பு தினமான ஆகஸ்ட் 15 அன்று சப்பர பவனி மற்றும் முக்கிய வழிபாடுகள் நடைபெறும். இத்திருவிழாவின் முக்கியத்துவத்தைக் கருதி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 14, 2026 அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம் – அரசு பொது விடுமுறை) மற்றும் ஆகஸ்ட் 16 (ஞாயிறு) ஆகிய நாட்களுடன் சேர்த்து 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. விடுமுறையை ஈடு செய்யும் வகையில், ஆகஸ்ட் 22ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறித்துள்ளது.
