தமிழக வானிலை அறிக்கை: இன்று நீலகிரி, தேனியில் கனமழை எச்சரிக்கை! சென்னைக்கு என்ன அப்டேட்?  

Estimated read time 1 min read

தமிழகக் கடலோர பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழை தொடரும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று, இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

You May Also Like

More From Author