2025ஆம் ஆண்டு ஐ.நாவின் சீன மொழி தினம் மற்றும் சீன ஊடகக் குழுமத்தின் 5வது சீன மொழிக் காணொளி விழா

2025ஆம் ஆண்டு ஐ.நாவின் சீன மொழி தினம் மற்றும் சீன ஊடகக் குழுமத்தின் 5வது சீன மொழிக் காணொளி விழா உள்ளூர் நேரப்படி ஏப்ரல் 15ஆம் நாள் ஜெனீவாவிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, சீன ஊடகக் குழுமம், ஐ.நாவுக்கான அலுவலகத்திலுள்ள சீனப் பிரிவு, ஸ்விட்சர்லாந்திலுள்ள வேறு சர்வதேச அமைப்புகளின் பிரிதிநிதிக் குழுக்கள், ஜெனீவாவிலுள்ள ஐ.நா அலுவலகம் ஆகியவை கூட்டாக செய்திருந்தன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறைத் துணைத் தலைவரும், சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹைய்சியொங், காணொளி வழியாக உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் கூறுகையில், சீனப் பயணம் என்பது, நடப்பு நிகழ்வின் தலைப்பாகும். இந்நிகழ்வின் மூலம், மேலதிக வெளிநாட்டு நண்பர்கள் சீனாவில் பயணம் மேற்கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.

ஜெனீவாவிலுள்ள ஐ.நா அலுவலகத்தின் பொது இயக்குநர் டாட்டியானா வலோவயா கூறுகையில், நாகரிகங்களின் பல்வகைமைக்கு மதிப்பளித்து, மேலும் இனிமையான எதிர்காலைத்தை உருவாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்வோம் என்றார்.

You May Also Like

More From Author