சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மலேசியப் பயணத்தை முன்னிட்டு, ஷிச்சின்பிங்கிற்குப் பிடித்த செவ்வியல் மேற்கோள்கள் எனும் நிகழ்ச்சி (மலாய் மொழியில்) ஏப்ரல் 15ஆம் நாள் அந்நாட்டின் பெர்னாமா உள்ளிட்ட ஊடகங்களில் ஒளிபரப்பப்பட தொடங்கியது.
மலேசியாவின் சின் சியூ டெய்லி, தி ஸ்டார், சினார் ஹரியான் முதலிய முக்கிய ஊடகங்கள், இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு குறித்த செய்தியை வெளியிட்டு விளம்பரம் செய்து வருகின்றன.
இது, மலேசியாவின் பல்வேறு துறையினர்களுக்கிடையே பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் மற்றும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன.
நாட்டின் ஆட்சிமுறை பற்றிய சீன அரசுத் தலைவரின் சிந்தனை, சீனப் பண்பாடு ஆகியவற்றை மலேசியா மக்கள் அறிந்து கொள்வதற்கு இது ஒரு திறவுகோலாக அமையும் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.